skip to content

கல்லுக்குள் கண்டான் எமை

கல்லுக்குள் கண்டான் எமை

ஆசிரியர் தினம் குறித்த எமது எண்ணங்கள்...

சொல்லாற் படியமைத்தே செல்லும் வழிகாட்டி
எல்லாம் கொளக்கண்டான் ஆசிரியன் - நில்லாது
தேனாக வேர்நனைத்து தேடும்நீர் தந்துமவ்
வான்மழையோ வேண்டும் பழம் (01)

எண்ணும் எழுத்துமென் எண்ணத்திற் தந்தேறச்
சுண்ணம் பிடித்தாய் சுவரேழுதி - என்குருவே
சால்கொண்ட நீர்வாங்கிச் சிந்தாது வேர்சேர்த்தக்
கால்வாய்க்குச் சாயுந் தலை (02)

கல்வியென்றோர் வில்லிற் கணையாக்கி என்னையுன்
சொல்லொன்றால் நீபணித்தாய் செல்லெனவே - நல்விதமாய்
எம்பிக் குதித்தே எழுந்தேறி நாண்விட்ட
அம்பன்ன சேர்ந்தேன் இலக்கு (03)

கருவைப் பெருக்கிப்பின் 'கல்நீ'யென் றன்னை
தெருப்பள்ளி சேர்த்துத் தெளிந்தாள் - குருசிற்பி
சில்லாய்ச் சிதைத்தெடுத்து தீர்த்துக் குறையாவும்;
கல்லுக்குள் கண்டான் எமை (04)

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.