skip to content

ஹைக்கு சிதறல்கள்

  • கசங்கிய கைப்பை,
    திறந்ததும் பளிச்சிட்டது கோஹினூர் வைரம்.
    வயதான என் அம்மாவின் முகம்.
  • மடியில் கனம்,
    மறைத்து செல்கிறாள்.
    சம்பள நாள்.
  • சொற்களால் வலை பின்னும்
    ஒரு நவீன சிலந்தி -
    தொலை பேசி!
  • இதயத்தை இதமாய் உறிஞ்சும்
    இரண்டு தேனீக்கள் -
    கண்கள்!
  • வேரிலே பூவேந்தி
    தலை கீழாய் ஒரு மரம் -
    மின் விளக்கு கம்பி!
  • திருவிழாவில் மகிழ்கிறது,
    பலிகடா ஆடு -
    வாக்காளன்!
  • இந்த சமுத்திரத்தின்
    ஒவ்வொரு துளியும் முத்து -
    அகராதி!
  • சிந்தச் சிந்த இலேசாகும்
    ஒரு கண்ணீர்க்குடம் -
    இதயம்!
  • வளர்ந்த உயிர்
    வளர்கின்ற உயிரை கொல்கிறது;
    புல் மேயும் ஆடு!
  • நிதம் ஒரு மலர்;
    புதுப் புது வண்ணங்கள்;
    செய்தித்தாள்!
  • ஒருவோடோரொருவரின்
    எண்ணங்களை இணைக்கும் கிறுக்கல்கள்;
    எழுத்து!
  • எண்களுக்குள்
    சில எண்ணங்கள்;
    சுடோகு!
  • இன்பத் தற்கொலை -
    மனதுள் உறையும் கவிக்குறுவாள்;
    ஹைக்கு!

ஹைக்கூ சிதறல்கள் - 2
ஹைக்கூ சிதறல்கள் - 3

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.