மருந்தீச்வரன் அந்தாதி (61-70)
-
தருவார் தலம்பெருந் திங்களன்றோர் நாள்வந்
தருவார் வடிவிலங்கு றைவார் - தருவார்
தவறா தருளுமக்கு தந்தும் மறத்தல்
தவறா முணர்வே திரு (61)சொற்பிரித்து:-
(கொன்றை) தரு ஆர் தலம் பெருந்திங்களன்று ஓர்நாள் வந்து
அரு ஆர் வடிவில் அங்கு உறைவார் - தருவார்
தவறாது அருள் உமக்கு; தந்தும் மறத்தல்
தவறாம்; (அவர்) உணர்வே திருஅருஞ்சொற்பொருள்:-
திரு - நல்வினை -
திருவருள் தந்திடும் சோதியான் உள்ளத்
திருவருள் ளாரவன் தாளேத் - திருவருள்
மண்ணோடி செவ்வடிகாண் மாதவன் வந்தேத்தும்
மண்ணோடி மன்றாடி முற்று (62)சொற்பிரித்து:-
திருவருள் தந்திடும் சோதியான், உள்ளத்து
இருவர் உள்ளார் அவன் தாளேத்து - இருவருள்
மண்ணோடி செவ்வடிகாண் மாதவன் வந்து ஏத்தும்
மண்ணோடி மன்றாடி முற்றுஅருஞ்சொற்பொருள்:-
முற்று - முற்றுகையிடு -
முற்றும் வினையெலாம் வான்மியூர் வந்தேத்த
முற்றும் விழைவோர் மனவிரும்பு - முற்றும்
தருவான் மருந்தீசன் தீதறுக்க பெற்றான்
தருவான் முனிமந் திரம் (63)சொற்பிரித்து:-
முற்றும் வினையெலாம் வான்மியூர் வந்தேத்த
முற்றும்; விழைவோர் மனவிரும்பும் முற்றும்
தருவான் மருந்தீசன்; தீதறுக்க பெற்றான்
தரு ஆன் (குறு)முனி மந்திரம்அருஞ்சொற்பொருள்:-
முற்றும் - முதிரும் / முடியும் / முழுதும்
ஆன் - அவ்விடம்
முனி - குறுமுனி அகத்தியன் -
திரங்க மடைநெஞ்சே தீக்கணன் இல்சேர்ந்
திரங்க வனேஉன் நிலைபார்த் - திரங்கப்
பணிந்தவன் தாளேத்து பால்வண்ணன் பாதம்
பணிந்தவன் பாலருட்பெ ருக்கு (64)சொற்பிரித்து:-
திரங்கம் அடை நெஞ்சே, தீக்கணன் இல் சேர்ந்து
இரங்கு; அவனே உன் நிலை பார்த்து - இரங்கப்
பணிந்து அவன் தாளேத்து; பால்வண்ணன் பாதம்
பணிந்தவன் பால் அருட் பெருக்குஅருஞ்சொற்பொருள்:-
திரங்கம் - நகரம்
இரங்கு - அழு
இரங்கு - கருணைசெய் -
பெருகுபுன லார்கடலூர்ப் பெம்மான் முடிகண்
பெருகுபுன லார்கங்கைப் பூந்தூள் - பெருகுபுனல்
பூங்கொன்றைந் தாகப் புரிந்தாரப் பாலவனைப்
பூங்கொன்றைக் கொண்டுப் புனை (65)சொற்பிரித்து:-
பெருகுபுனல் ஆர் கடல் ஊர்ப் பெம்மான், "முடிகண்
பெருகுபுனலார்", கங்கைப் பூந்தூள் பெருகுபுனல்
பூங்கு ஒன்று ஐந்தாகப் புரிந்தார் அப் பாலவனைப்
பூங்கொன்றைக் கொண்டுப் புனைஅருஞ்சொற்பொருள்:-
பெருகு - கடல் நீரேற்றம் / வெள்ளம் / அதிகரித்தல்
பூங்குதல் - பொங்குதல்பாடற்குறிப்பு:-
பெருமானின் தலைவாழ் கங்கையின் துளி திருவான்மியூர் தலத்தில் விழுந்து அதுவே ஐந்து தீர்த்தங்களாக அமைந்துள்ளன. -
புனைவார் சடைமேல் பிறையொடுபூங் கொன்றை
புனைவார் பெருமான் புகழைப் - புனைவார்
கவியாய்ப் புலவரன்றிக் கோன்புகழ் கூறாக்
கவியாய்ப் பயனெதற் கோ (66)சொற்பிரித்து:-
புனை வார் சடைமேல் பிறையொடு பூங்கொன்றை
புனைவார் பெருமான் புகழைப் - புனைவார்
கவியாய்ப் புலவர்; அன்றிக் கோன் புகழ் கூறாக்
கவி ஆய்ப் பயன் எதற்கோ?அருஞ்சொற்பொருள்:-
புனை - நீர்
வார் - ஒழுகுதல்
புனைவார் - அணிதல் / எழுதுதல் -
கோலத்தாய் பாகத்தாய் கையமொலி சேர்நகர்தங்
கோலத்தாய் சேயுமைதி யாகேசன் - கோலத்தாய்
பத்தனேத் தும்பரமாய் யாதுமாய் நின்றஅரூ
பத்தனே என்னுள் பயில் (67)சொற்பிரித்து:-
கோலத்தாய் பாகத்தாய்; கையம் ஒலி சேர் நகர் தங்கு
ஓலத்தாய்; சேய் உமை தியாகேசன் - கோலத்தாய்;
பத்தன் ஏத்தும் பரமாய் யாதுமாய் நின்ற
அரூபத்தனே என்னுள் பயில்அருஞ்சொற்பொருள்:-
கோலத்தாய் - அழகு பொருந்திய தாய் (பார்வதி)
கையம் - கடல்
ஓலம் - பாம்பு
அரூபத்தன் - அருவமாய் அமைந்த சிவன்
பயில் - தங்கு -
பயில்வானை நின்றடைத்தோன் பேரதின்பம் ஈங்கண்
பயில்வானை இத்தலத்தார்ப் பாடிப் - பயில்வானை
அத்தனை ஏத்த அமுதபுரி வந்துள்ளார்
அத்தனை இன்பம் அடை (68)சொற்பிரித்து:-
பயில், வானை நின்றடைத்தோன் பேர், அது இன்பம்; ஈங்கண்
பயில்வானை, இத்தலத்து ஆர்ப்பு ஆடிப் - பயில்வானை,
அத்தனை ஏத்த, அமுதபுரி வந்து, உள் ஆர்
அத்தனை இன்பம் அடைஅருஞ்சொற்பொருள்:-
பயில் - சொல்
பயில்வானை - தங்குதல் / பழகுதல்
ஆர்ப்பு - மகிழ்ந்து
உள் - மனம்
ஆர் - அமைந்த -
அடைவானை ஆழ்மண்ணை அங்கோடிங் கென்றே
அடைவானை ஏத்தமு தூரை - அடைவானை
மெய்சேர்த் தணைவானை மன்னாற வெண்ணீற்றை
மெய்சேர்த் துநீயும் முனை (69)சொற்பிரித்து:-
அடை வானை, ஆழ் மண்ணை, அங்கோடு இங்கு என்றே
அடைவானை ஏத்த அமுதூரை - அடைவானை
மெய் சேர்த்து அணைவான் ஐ; மன் ஆற, வெண்ணீற்றை
மெய் சேர்த்து நீயும் முனை -
முனைநின்றாய் மூவருள் வான்மியூர் மேவு
முனைநின்றாய்ந் தேன்கவியால் ஒவ்வா - முனைநின்றாய்
நீயென்கு றைகண்டாய் என்னிடத்தே நாவேறி
நீயென்கு றையறுக்க வா (70)சொற்பிரித்து:-
மு(ன்)னை நின்றாய் மூவருள், வான்மியூர் மேவும்
உ(ன்)னை நின்று ஆய்ந்தேன் கவியால்; ஒவ்வா - முனைநின்றாய்
நீ; என்(ன) குறை கண்டாய் என்னிடத்தே? நா ஏறி
நீ என் குறை அறுக்க வாஅருஞ்சொற்பொருள்:-
ஒவ்வாது - இசையாது
முனை - கோபித்து
| 01-10 | 11-20 | 21-30 | 31-40 | 41-50 | 51-60 | 61-70 | 71-80 | 81-90 | 91-100 |
