skip to content

இடையில் இவர்கள் எதற்கு?

உன் சிரிப்பு சில்லரையில்
என் நெஞ்சம் நிறைந்தது -
அதை நீ களவாடியபின் தான் தெரிந்தது -
நான் மீண்டும் ஏழை என்று!;
வா! மீண்டும் சிரி!

நீ கொடுத்தாய், நான் எடுத்தேன்;
நான் கொடுத்தேன், நீ எடுத்தாய் -
இடையில் இவர்கள் எதற்கு?

என் மனதில் நீ விதைத்தாய்.
உன் மனதில் நான் விதைத்தேன்.
இருவரும் பறிப்போம் பூக்களை! -
இடையில் இவர்கள் எதற்கு?

நம் ராஜ்யத்தில் நீ ராணி;
நான் ராஜா;
நம் நினைவுகளே குடிமக்கள்;
கனவுகள், வரும் போர்கள் -

நம் மொழியில்
நீ உயிர்;
நான் மெய் -
வெறும் சப்தங்களாய்,
இடையில் இவர்கள் எதற்கு?

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.