skip to content

நீ

ஏழு சுரங்களில் ஏராளமான கீதங்கள்,
அந்த ஏழு சுரங்களை பிரித்துப் பொருள் கொடுக்கும்
எட்டாவது சுரமாய் மௌனம்!
அந்த மௌனமாய் நீ!

மண்ணுள் விழுந்த விதை;
விருட்சமாகும் அதனுள் உயிர்!
அந்த உயிராய் நீ!

பூக்களாய் சிரித்தும்,
நெருப்பாய் சினந்தும்,
மழையாய் அழுதும்,
தன் அகத்தை புறப்படுத்தும்
இயற்கையின் உணர்வுகள்!
அந்த உணர்வாய் நீ!

நாக்கின் நரம்புகளில் நடனமாடும்
ஆறு சுரங்களாய் அருசுவை!
அந்த அருசுவையாய் நீ!

இறந்த காலம் ஒரு வரலாறு,
எதிர்காலம் ஒரு புதிர்,
இவைகளுக்கிடையில் சின்னஞ்சிறு துளியாய்
நிகழ் காலம்!
அந்த நிகழ்வாய் நீ!

தாயின் படைப்பாய் சேய்,
கவிஞனின் படைப்பாய் கவி,
ஓவியனின் படைப்பாய் வர்ணம்,
இந்த ஒவ்வொருவரையும் படைப்பாய் நீ!

சக்தியில் உரு உண்டு;
உருவினுள் சக்தியும் உண்டு;
சக்தியும் உருவும் வெவ்வேறான 'ஒன்று'!
அந்த சமமான சக்தி உருவமாய் நீ!

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.