skip to content

புரியாத புதிர்

எல்லாவற்றிலும் நீயாக
நீயே எனக்காக
எல்லாமே எனக்காகுமா இறைவா?
இது எந்தன் பேராசையோ?

கல்லாகி நின்றாலும்
கருவாகி இருக்கின்றாய்
கருவாகி என்னுள்ளே- என்னை
கருவியாய் மாற்றிவிட்டாய்!

சொல்லாமல் சொல்கின்றாய்!
சொல்லாமல் கொல்கின்றாய்!
எல்லாம் எனக்காக- இவை
எல்லாம் எனக்காகுமா?

முள்ளாக நான் ஆனால்
கண்ணாக நீ ஆவாய் -
கண்ணாக நான் ஆக
முள்ளாகி முளைக்கின்றாய்!

என்னாலும் புரியாத புதிரே!
என்றாலும் எனக்கேன் நீயெதிரே?

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.