கடவுளும் மரணமும் ஒன்று - இரண்டையும் அறிவது கடினம்!
இயற்கையின் படைப்பில் எல்லாம் இரு கூறுகளாய்த்தான் உள்ளன;
இரவு பகல்; இனிப்பு கசப்பு; கருப்பு வெள்ளை; பிறப்பு இறப்பு.
இவைகள் போல இறப்பின் பின்னரும் சொர்கம், நரகம் என இரண்டு கூறுகள் இருக்க சாத்யமா?
அறிவியல் பூர்வமாய் ஆய முற்படின், பிரபஞ்ஞத்தில் எதுவும் நிலையானது அல்ல; எதுவொன்றின் நிலையும் நிலை அல்ல; மாறுதல் என்பது மாறாதது; பல வடிவ வேறுபாடுகளே பிறப்பாயும் அழிவாயும் காட்சி தருகிறது. மாறும் வடிவமும் மாறிய வடிவமும் நமக்கு தெறியும் எனில் மாற்றம் என்கிறோம்; இரண்டில் ஒரு வடிவம் நமக்கு தெரியாத போது அத்தகைய மாற்றத்தை ஆக்கம் என்றும் அழிவு என்றும் வேறுபடுத்தி பார்க்கிறோம்.
இறப்பு என்பது ஏன் இவ்வளவு கனமாக மனதில் தெரிகிறது? காரணம் எதிர்பார்ப்பு! நாம் விரும்பும் ஒன்றை ஒன்றை இழக்கும் போது ஏற்படுகின்ற சாதாரண எதிர்பார்ப்பு! கிடைத்ததை இழக்கிறோம் என்ற உணர்வு!
இறப்பு என்பது இருந்தவரை வாழ்ந்த வாழ்க்கையை விமர்சிக்க உலகத்துக்கு ஒரு வாய்ப்பு! அத்தகைய வாய்ப்பில் நம்மை பற்றி நல்ல விதமாக நாலு பேர் கூற நல்ல விதமாய் வாழ்வோம்!
