skip to content

மீண்டும் மிருகங்களாவோம்!

- எல்லையோரத்தில் எதிரிகள் விளையாட இன்னும் ஒரு ஆண்டு...

- சாதியின் பெயரால் சண்டை மூட்டி சுயலாபம் ஈட்ட இன்னும் ஒரு ஆண்டு...

- அரசியல் சந்தையில் அவசர லாபம் பெற விழையும் பச்சோந்திகளுக்கு இன்னும் ஒரு ஆண்டு...

- கிரிக்கெட் என்ற பெயரில் அரசின் அனுமதியுடன் சூதாட்டமாக்கி சுரண்ட இன்னும் ஒரு ஆண்டு...

- 33 சதவீதம் பெண்களுக்கு அரசியலில் இடம் கொடுப்பதாக சொல்ல இன்னும் ஒரு ஆண்டு...

- பங்கு சந்தையில் பண்படுத்தப்பட்ட சீட்டாட்டமாய் விளையாடும் சீமான்களுக்கு இன்னும் ஒரு ஆண்டு...

- இருப்பதையெல்லாம் இலவச வி நியோகம் செய்து, வரும் தேர்தலுக்காக தயாராகும் கட்சிக்கு இன்னும் ஒரு ஆண்டு...

- தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீதிகள் தோறும் பாலாய் தேனாய் ஒட வழி காண்பதாய் ஓலமிட இன்னொரு கட்சிக்கு இன்னும் ஒரு ஆண்டு...

- புத்தாண்டில் உலகத்தை உருட்டிவிடும் ஆசையுடன் அதை எதிர்பார்த்து கொண்டாடும் சிலருக்கு இன்னும் ஒரு ஆண்டு...

- புத்தாண்டையே ஒரு காரணமாய் கொண்டு மதுவருந்தி மகிழ்வதாய் நினைக்கும் சில மடையர்களுக்கு இன்னும் ஒரு ஆண்டு...

- மீண்டும் மீண்டும் வாழ்த்து சொல்லி தம்மை தாமே ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் அப்பாவி மக்களுக்கு இன்னும் ஒரு ஆண்டு...

- ஆண்டு பல கோடி வந்து போனால் என்ன? மனிதத்துவம் இன்னும் மலரவில்லை; தன் இனத்தை தானே எதிர்த்தலையும் மற்றும் தன் இனத்தை தானே கொன்று குவிக்கும் அவலத்தையும் கைவிட வேண்டும்; மனிதன் மீண்டும் மிருகமாக வேண்டும்; ஆம், மிருகமாக மாற வேண்டும்; தன் இனத்தை தானே மாய்க்கும் மனிதனை விட, தன் இனத்தோடு கூடி வாழும் மிருகமாய் இருப்பதே மேல்!

- வாருங்கள், மீண்டும் மிருகங்களாவோம்! உண்மையான வாழ் நிலை அதுவே! சூழ் நிலையை பாதிக்காத வரையில் சுகமே எங்கும் சாதிக்கும்!

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.