skip to content

பொருளைந்து

பொருளைந்து

-----

புல்லாய்ப் புதர்ச்செடியாய்ப் பூங்கொடியாய் நீள்மரமாய்
எல்லா விதமாயும் இங்கெழுந்தோம்! - வல்வனத்தில்
நல்லான் அவன்மண் நமக்கு

-----

வித்தாகி நாம்புவியில் வீழ்ந்துறையும் நாள்முதல்நீர்
முத்தாகி நம்மை முகிழ்த்தருள்வான்! - இத்தரையில்
சித்தாடும் நீரும் சிவம்

-----

ஒற்றைத் துளியுளத்தும் ஓயாத சூரியனாய்ச்
சுற்றிச் சுடர்பெருக்கிச் சூழ்ந்திருப்பான்! - வெற்றுடற்கண்
வற்றாத்தீ அத்தன் வரம்

-----

எங்குமமைந் தென்றன் எழுமூச்சில் ஊடுருவிக்
கங்குளத்தை ஊதிக் காக்கின்றான்! - தங்குமுயிர்ப்
பங்கெனுமக் காற்றும் பரம்

-----

கண்ணில் படும்பொருளைக் கற்பித்தும் காரணத்தை
எண்ணும் உளம்போல் எழுகின்றான்! - கண்ணுதலான்
விண்ணை விளைத்த விதை

-----

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.