skip to content

மழலைப் பாடல்கள் - 9

மழலைப் பாடல்கள்

1) அகரப் பாடல்

அறிவைத் தீட்டு
ஆணவம் ஓட்டு
இறையைப் போற்று
ஈகை ஆற்று
உறவோடு இணை
ஊக்கம் துணை
எளிமை நாடு
ஏழைமை கேடு
ஐந்தின் பயன்காண்
ஒன்றிப் பிழை
ஓயாது உழை
ஔவெனப் பழகு
அஃதுடற்கு அழகு

2) எண்ணிக்கை

ஒன்று - உலகின் சூரியன் ஒன்று!
இரண்டு - இரவு பகலென் றிரண்டு!
மூன்று - முத்தாய்த் தமிழ்காண் மூன்று!
நான்கு - நாட்டில் பருவம் நான்கு!
ஐந்து - அமைந்த புலன்கள் ஐந்து!
ஆறு - அருசுவை வகைகள் ஆறு!
ஏழு - இத்தரைப் பெருங்கடல் ஏழு!
எட்டு - எதிர்படும் திசைகள் எட்டு!
ஒன்பது - உடலின் வாசல் ஒன்பது!
பத்து - பற்றிடும் விரல்கள் பத்து!

3) உயிர்த்தொடர்கள் (அகரவரிசையில்)

அந்நாளில் சீருள் - பூஞ்
செந்தேனைக் கொண்டோள் ஔவை!
பண்பாடி ஈர்க்கும் - பூம்
பெண்வேங்கைச் சொற்கோ ஔவை!
தன்வாழ்வில் மீளும் - ஊழ்
வென்றேழ்மை கொன்றோள் ஔவை!
பண்வானின் மீனுன் - பூ
வெண்மேன்மைப் பொற்போ ஔவை?

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.