skip to content

தலமைந்து

தலமைந்து

-----

அன்றிலிங்கம் தன்னை அணைத்தேத்தும் அம்பிகைக்குச்
சென்றருளிச் சீர்செய்த தெய்வதமாம் ஏகம்பன்
நன்றுறையும் காஞ்சி நகர்

-----

பாரெழுந்(து) அன்னை பரம்பொருளைப் பூசிக்கும்
சீரமைந்த நல்லூர் திருவானைக் காவென்னும்
நீரிலிங்க நாதன் நிலம்

-----

உண்ணா முலையாளை ஓர்கூறாய்க் கொண்டானை
விண்ணார் சுடரொளியாய் வேதன்மால் கண்டபதி
அண்ணா மலையூர் அழகு

-----

போற்றும் அடியார்க்குப் பூங்கோதை பாகத்தான்
நீற்று நுதல்விழியான் நின்றருளும் காளத்தி
காற்றுத் தலமே காப்பு

-----

எல்லையிலா வான்வெளியாய் எங்கெங்கும் காணணுவாய்
அல்லொளியாய் அன்றின்றாய் ஆதரவாய் ஆடுமிறை
தில்லை நகர்காண் சிறப்பு

-----

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.