skip to content

எண்ணைந்து

எண்ணைந்து

-----

ஒன்றான் எதிலும் உளதெலாம் அவனே
ஒன்றவன் பதிபனி உறையும் மாமலை
ஒன்றே மந்திரம் உயரைந் தெழுத்தே
ஒன்றென வான்மண் உயர்ந்த ளந்தவன்
ஒன்றவன் நினைவில் ஒழியும் பாவமே

-----

இருக்கும் எல்லா இயற்கைக்கும் மூலவன்
இருவருக் கெட்டா இலக்கென வானவன்
இருகொம் பிடையா டெழிலுடை நாயகன்
இருகூ றுடையான் இணையடி போற்றி
இருத்துன் நினைவை இலையாம் பாவமே

-----

மூவா மலைமேல் மோனத் திருப்பவன்
மூவர் தொழிலாய் முழுமை ஆனவன்
மூவார் போற்றும் முழுமுதற் சுயம்பு
மூவா முதல்வன் முத்தைந் தெழுத்தாம்
மூவா மருந்தால் முடியும் பாவமே
(மூவாமலை=இமயம்; மூவார்=தேவர்)

-----

நால்வாய்க் கரிஉரி நயந்த ணிபவன்
நால்வரின் நாவில் நடமிடு நாயகன்
நான்மறை நாதனின் நற்றாள் பணிந்து
நானென மனத்தெழு நாட்டம் அகற்றிட
நாலும் சேர்ந்திடும் நலியும் பாவமே

-----

ஐந்தலைப் பிரமனின் அகந்தை அழித்தவன்
ஐந்தொழில் புரியும் அம்பல வாணன்
ஐந்து முகத்தான் அரன்றாள் போற்றி
ஐந்தடைத் துளத்தை ஆழ்நெறிப் படுத்தி
ஐந்தெழுத் துரைத்திட அழியும் பாவமே

-----

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.