skip to content

வண்ணப்பாடல்கள்

 1. புத்தியை அருள்வாயோ
  சந்தம்:
  தத்தனா தானனத் .. தனதான

  பாடல்:
  வித்ததே வேரினைத் .. தருமாதி
  .. வெற்றதே தானெழப் .. பரமானாய்
  சத்திசூழ் வானுடைப் .. பொருளாய் நீ
  .. சுற்றியே கோளுடைத் .. திரளானாய்
  நித்தமே ஓடிடப் .. பகலாகி
  .. நிட்டையை நாடிடப் .. பொழுதானாய்
  பித்தனே சேர்சடைப் பெருமானே
  .. புத்தியை நீயெனக் கருள்வாயோ

 2. மழை
  சந்தம்:
  தானன தானன தானன தானன
  .. தானன தானன .. தனதான

  பாடல்:
  வானுடை மேவிடு மாமலை யாயுள
  .. வீரிய மேகம ததுவோடி
  கானிடை மேலொரு வானுறை தேரென
  .. போகிற மேகம தனைமோத
  ஏனினி வானிடை நீளிரு ளோவென
  .. ஈரொரு கோடுடனோளிவீச
  தேனது போலுள நீரது ஓடியே
  .. சேருது பூமியை மழையாக

 3. சந்தம்: தனதனன தாத்த .. தனதான

  கதிரவனை நோக்கு மலரே நீ
  ...கருவிரவு காத்து அயராயோ
  கதிரிலுனை தாக்கி (ச்)சுடுவோனை
  ...கருணையுட ணோக்கி நகையோடு
  உதயமுத லேற்று உறவாடி
  ...விழுபொழுது காற்றி லழுவாயே
  நிதமவனை ஏத்து மொளியோளே
  ... நினதழகு காக்க அவனாமோ?

 4. சந்தம்: தானத்தத் தனந்த தத்தந் .. தனதான

  தேனொக்கத் தெளிந்து கொட்டும் புனலோடு
  ...தாளெட்டிப் பரந்த சித்தன் முடிசேர
  வானத்துப் பிரிந்து வட்டங் குறையோடு
  ...வாழக்கைத் தொழுந்து வக்கும் நிலவே நீ
  கோனொக்கக் கொழுந்த அத்தம் எனதேனும்
  ...கூசற்கக் களித்த வெந்தன் வினைமாற
  மோனத்தைக் கலைந்து அத்தன் அருளாள
  ...பாதத்தைத் தெரிந்து பற்றும் வழிகூறாய்

  (அத்தம் - செல்வம்)

 5. சந்தம்: தனதனன தாத்த .. தனதான

  இலையினிடை பூத்த மலரோடு
  ...இளமையது கோற்ற நிறமேற
  வளையமிடு தோட்ட அளியோடி
  ...வருகையினி லேற்ற மதுகாண
  மலருமொரு மாற்று வழிதேடி
  ...மகரமதை ஏற்று அளியோடு
  குலவுகிற காட்சி யினைநாடி
  ...குவிகிறது காற்று முறையாமோ?

  (அளி - வண்டு)

 6. சந்தம்:
  தனன தனதன தனன தனதன
  தனன தனதன .. தனதான

  மதகு விடமொரு அரச மரமிசை
  ..மலரு முகமொடு அமைவோனே
  உதவி யெனயுள முருகி வழிபட
  ..அணுகி யொருவழி விடையாக
  நிதமு மருளிட நினது மலரடி
  .. நிழலி லொருவிட மெனதாகி
  அதையு மருளிய அழகு கரிமுக
  .. அடிய னெனதுள முனதாமோ

 7. சந்தம்: தனதனன தாத்த .. தனதான

  உனதுதவி ஏற்று ...கவிபாட
  ...உடனுனது மாட்சி ...எனை சேர
  மனமெனது போற்றி ...யுனைபாட
  ...மகிழுமது நாக்கு ...விழிமூடி
  துணிவெனதை மீட்டு ...வளமாக
  ...தொடரவெனை யாண்டு ...வருவோனே
  கணமுமுனை ஏத்தி ...மறவாத
  ...கழியனெனை ஏற்க ...மறையோனே

 8. Global Warming குறித்து இயற்றியது...

  வன நிலமே சாய்ந்து கருகாக
  ...வளருமர மாய்த்து விறகாகி
  அனலதுவே சேர்ந்து புகையாகி
  ...அகிலமது மாய்ந்து இரையாக
  புனலதுவோ பாய்ந்து கறையேர
  ...புகலுலகு பார்த்து அழித்தாயே
  கனகமென காய்ந்து கழலேற
  ...கருகுருகி மாண்ட புவியே நீ

 9. இருவரவர் சேர்ந்து நினைகாண
  ...இருபுறமும் பாய்ந்து பறந்தாரே
  உருவமது ஓங்கி உலகாள
  ...உனதுஎழில் பூத்த உமையோனே
  திருமுடியை நோக்கு திசைபோன
  ...திருக்கமலன் சோர்ந்து களைப்பார
  செருக்கறுத்து தேர்ந்த திருமார்பன்
  ...சிவனடியை சேர்ந்து தெளிந்தானே
Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.