இராம பட்டாபிஷேகம்
இந்த புதிய யுத்தத்தில்
இராமனே
இராவணன் பக்கம் -
தன் கோதண்டத்தையே
கடன் கொடுத்து விட்டு
பேசா நெறியுடையோன்
இலக்குவணன்
இராமனின் இடப் பக்கம்
வடக்கிருந்த சுக்கிரீவன்
ஓடோடி வந்தான்
இலக்குமனின் இடப் பக்கம்
அன்புத்தோள் கொடுக்கும் ஜாம்பவான்,
இராமனின் வலப் பக்கம்
முன்னொரு நாள் தூது சென்ற
அனுமன் இந்தப் பக்கம்
விபீடனன்
வழி தெரியாது
இந்தப் பக்கம்
பொறுமைச் சிகரம் பூமாதா
ஒரு பக்கம்
வருகிறது
இராம பட்டாபிஷேகம் -
சீதை கிடக்கட்டும்.
