skip to content

சூரிய கிரகணம்

அண்மையில் கண்ட சூரிய கிரகணத்தைக் குறித்து என் கற்பனைகள்...

சின்னத் திரைவிரித்துச் சூரியனை நீயொளித்(து)
என்னதான் கண்டாய்சொல் என்னிலவே - முன்னைவிட
எண்ணற்றோ ரின்றெழுந்து பின்னக் கதிரவனைக்
கண்டுற்றார் பேரின்பம் தான் (01)

செறிவாய்த் தமிழ்தூவிச் சேர மணங்காணும்
நெறியால்நான் நின்றேன் நிலவே - அறியாமல்
அண்டத்தீ தன்னை அணைக்க முயன்றேநீ
கொண்டாய் முகத்தில் கரி (02)

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.